இது கிபி 628 முதல் 630 வரை இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது.
இந்த பள்ளிவாசலுக்கு பழைய ஜும்மா பள்ளி அல்லது மீன் கடை பள்ளி என்ற இரண்டு பெயர்களும் உள்ளது.
இதனுடைய கட்டிட அமைப்பு திராவிட இஸ்லாமிய கட்டிடக்கலை என்று அழைக்கப்படுகிறது
முகமது நபியின் காலத்தில் எமனின் ஆளுநரான பாதன் ( ஃபசான் இபின் சாசன்) கட்டளையிட்டு பாண்டிய ராஜ்ஜியத்தில் இஸ்லாமியருக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஏமன் வணிகர்கள் மற்றும் வணிக குடியேறியவர்களால் கட்டப்பட்டது.
இரண்டாம் கோசரா-வின் மகனால் (பாரசீக மன்னர்) இந்த மசூதி ஷஹீத் போருக்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. இது இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும்.
மசூதி கட்டிடக்கலை ஒரு கோயில் கட்டிடக்கலை போல் தெரிகிறது. ஆனால் தூண்கள் அல்லது இவர்களில் சிலைகள் எதுவும் இல்லை.
மசூதியின் உள் சுவரில் மிஃராப் உள்ளது இது காபாவை நோக்கி தொழுகையின் திசையை அடையாளம் காண மசூதிகளின் தனித்துவமான அடையாளமாகும். பல வாசல் என்ற பெயருக்கு பல கதவுகள் உள்ள வழிபாட்டுத் தளம் என்று பொருள்.