1. இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட முகம்மதுபின்துக்ளக் தில்லி சுல்தானகத்தை ஆண்ட சுல்தானும் துக்ளக் வம்சத்தில் தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். 

2. கியாத் அல்-தின் துக்ளக்கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவர் டெல்லியில் பிறந்தவர்.

3. இவரது தந்தையின் மறைவிற்கு பிறகு தில்லி சுல்தானகத்தின் 1325இல் மன்னரானார்.

4. முகம்மது பின் துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாது மருத்துவத்திலும் தத்துவ வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார்.

5. இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். பாரசீகம்அரபுதுருக்கி மற்றும் சமஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

6. மொரோக்கோ நாட்டு பயணியான இப்னு பதூதா இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார்.

7. துக்ளக் தனது நிர்வாகத்தில் பல புதுமைகளைப் புகுத்தினாலும் அவை தோல்வியடைந்தன.

A coin from the period of Muhammad ibn Tughluq (reigned 1325–51).

8. தனது சுல்தானகத்தை மேலும் வலுப்பெற வைக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் தலைநகரை தில்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார். இது தில்லியில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் தக்காணத்தில் இருந்தது. தேவகிரி நகரத்தின் பெயரை தௌலதாபாத் என முகமது பின் துக்ளக் மாற்றினார்.

9. சிறந்த திட்டமிடல் இல்லாததாலும், மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்தத் திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது.

10. பின்னர் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.  

11. துக்ளக்கின் ஆட்சியின் போது அவரது பேரரசின் பல பகுதிகள் (எடுத்துக் காட்டாக தமிழகத்தில் குறுகிய காலம் ஆட்சியில் இருந்த மதுரை சுல்தானகம் மற்றும் பாமினி சுல்தானகம்) போன்றவை அவருக்கு எதிராகப் புரட்சி செய்து பிரிந்து சென்றுவிட்டன. இவ்வாறான கலகங்களை அடக்குவதில் துக்ளக் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டார். அவரது ஆட்சிக்காலத்தின் இறுதியில் தில்லி சுல்தானகத்தின் பரப்பளவு வெகுவாக சுருங்கிவிட்டது.