ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக நாம் QR code கொண்ட காலண்டர்களை வெளியிட்டு வருகிறோம்.

2024 ஆம் ஆண்டு வரலாற்றை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சுதந்திர போரில் முஸ்லிம்களின் தியாக வரலாற்றை ஆவணப்படுத்தினோம்.

2025 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். அல்ஹம்துலில்லாஹ் இவ்வரிசையில்

2025 ம் ஆண்டு “குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகள்” தலைப்பின் கீழ் காலண்டரை வடிவமைத்துள்ளோம்.

உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.

உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிற்கான மீன்களை தனது உணவாக உட்கொள்கிறது. அப்படியென்றால் எத்துனை கோடி உயரினங்களுக்கு அல்லாஹ் உணவளிக்கின்றான் என்று சிந்தித்தால் அல்லாஹ்வின் வல்லமை எளிதாக விளங்கும்.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமக்குரிய உணவைச் சுமந்து கொண்டிருப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.(அல்குர்ஆன்: 29:60)➚

மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தனது திருமறையின் மூலம் வழிகாட்டும் அல்லாஹ் “உணவு” குறித்தும் அதை எவ்வாறு தனது வல்லமையால் உற்பத்தி செய்கிறான் என்றும், நாம் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும், எதை உண்ண வேண்டும், எதனை உண்ணக்கூடாது என ஒவ்வொன்றையும் நமது நலன் கருதி பாகுபடுத்தி திருமறையில் எராளமான வசனங்களில் விவரிக்கின்றான்.நீரின்றி அமையாது உலகு:எந்த உணவு பொருள்களாக இருந்தாலும் அது உற்பத்தியாவதற்கு மிக முக்கிய ஆதாரம் “மழையாகும்”. இறைவனின் கருணையாம் மழை எனும் இவ்வருட்கொடை மட்டும் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. மேலும் நிலத்தில் விளையும் அனைத்து விளைச்சல்களுக்கும் மழை நீரே ஆதாரமாகும். இது குறித்து அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏

இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய மழையிலும், அதன்மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்வதிலும் சிந்திக்கின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்: 45:5)➚

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى

அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் உங்களுக்காகப் பாதைகளை ஏற்படுத்தினான். வானிலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.(அல்குர்ஆன்: 20:53)➚

பல்வகை உணவுகள்:மனிதனின் விருப்பத்தை அறிந்த அல்லாஹ் ஒரே விதமான உணவுவை ருசித்து சளித்து விடாமல் இருப்பதற்கு பல்வேறு உணவு வகைகளை பல சுவைகளில் ருசித்து இன்புற தானியங்களையும் கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن

படர விடப்பட்டவையும், படர விடப்படாதவையும் கொண்ட சோலைகளையும், பேரீச்ச மரங்களையும், பலவகை உணவுகளைக் கொண்ட விளைச்சலையும், ஒத்ததாகவும் மாறுபட்டதாகவும் அமைந்த ஸைத்தூன் மற்றும் மாதுளையையும் அவனே படைத்தான். அவை பயனளிக்கும்போது அதன் பயனிலிருந்து உண்ணுங்கள்! அதன் அறுவடை நாளில் அதற்கான கடமையைக் கொடுத்துவிடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன்: 6:141)➚

وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ

அருகருகே இருக்கும் (நிலப்) பகுதிகள் பூமியில் உள்ளன. (அவற்றில்) திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகள் படர்ந்த மற்றும் கிளைகள் படராத பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரேவிதமான நீர்தான் அவற்றுக்குப் பாய்ச்சப்படுகிறது. ஆனால் அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைச் சுவையில் சிறப்பாக்கியுள்ளோம். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்: 13:4)➚

மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ۚ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

நீங்கள் கடலிலிருந்து புத்தம் புதிய இறைச்சியை உண்பதற்காகவும், அதிலிருந்து நீங்கள் அணியும் ஆபரணங்களைத் தேடி எடுப்பதற்காகவும் அவனே கடலை வசப்படுத்தியுள்ளான். அதில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களையும் நீர் காண்கிறீர். அவனது அருளை நீங்கள் தேடுவதற்கும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு வசப்படுத்தினான்).(அல்குர்ஆன்: 16:14)➚

தடை செய்யப்பட்ட உணவுகள்:எண்ணற்ற உணவுகளை உண்பதற்கு அனுமதிக்கும் அல்லாஹ் மனிதனுடைய நலனுக்காக சில உணவுகளை உண்பதற்கு தடை விதிக்கிறான்.

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ

(தாமாகச்) செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிபட்டவை, அடிபட்டவை, (மேலிருந்து) உருண்டு விழுந்தவை, கொம்பால் முட்டப்பட்டவை, வேட்டையாடும் பிராணிகள் கடித்தவை ஆகியவற்றில் (அவை இறக்கும் முன்) நீங்கள் (முறைப்படி) அறுத்தவற்றைத் தவிர (இவற்றில் செத்தவையும்), பலிபீடங்களில் அறுக்கப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.) அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (தடுக்கப்பட்டுள்ளது.) இது பாவச் செயலாகும்.(அல்குர்ஆன்: 5:3)➚

விலங்குகளின் இறைச்சியோ, பறவைகளின் இறைச்சியோ அவைகளை மனிதன் உண்ணும் போது அவற்றை அறுத்து அவைகளின் உடலில் இருந்து முழவதுமாக இரத்தம் வெளியேறிய பிறகு மனிதன் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள அனைத்து விதமான கெட்ட கிருமிகளும் வெளியேறி சுத்தமான இறைச்சியை மனிதன் உண்ணுகிறான்.இன்றைய அறிவியல் கூட அறுத்த விலங்குகளின், பறவைகளின் இரத்தம் முழவதும் வெளியேறி மாமிசங்கள் சுத்தமாகிறது என்று கூறுகிறது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் இறந்த, தாமாக செத்தவற்றை உண்ண வேண்டாம் அது மனிதனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

அதுபோல பறவைகளின், விலங்குகளின் இரத்ததை உண்ண இஸ்லாம் தடை செய்கிறது. இரத்தத்தை மனிதன் சமைத்து உண்டால் பல்வேறு விதமான நோய்கள் உருவாகும் என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் தனது திருமறையில் தடை செய்கிறான். இன்றைய அறிவியலும் இதையே ஆய்வு செய்து கூறுகிறது.அதே போல பன்றியின் இறைச்சியை உண்ண அல்லாஹ் தடை செய்துள்ளான். இன்றைய அறிவியல் உலகம் பன்றி இறைச்சியை உண்டால் அதில் உள்ள நாடப்புழுக்கள் மனிதனுடைய உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது.எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு, மனிதன் எந்த உணவை உண்ண வேண்டும், எதை அவன் தவிர்க்க வேண்டும் என்பது தெரியும்.

அவற்றையே அவனது வேதமான திருக்குர்ஆனில் வலியுறுத்துகிறான்.உணவுகளை வீணாக்க வேண்டாம்:இன்று உலகில் பல நாடுகளில் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இன்னும் சில நாடுகளில் அதிமான உணவுகளை தங்களுக்கு என்று சேமித்து வைத்து அடுத்தவர்களுக்கு கொடுக்காமலும் வீண்விரயம் செய்து வருகின்றனர்.இறைவன் கொடுத்த அருட்கொடையான உணவை மனிதனின் தேவைக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணவை ஒரு போதும் வீணாக்க கூடாது என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கை செய்கிறான்.

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்: 7:31)➚

இப்படி பல்வேறு விதமான உணவுகளை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி தன் அருட்கொடைகளை பொழிகிறான். ஆனால் மனிதனோ எல்லாமே இயற்கையாகவே உற்பத்தியாகிறது என்று கூறி தன் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கிறான். எனவே உணவு எனும் அருட்கொடை உலக மக்களின் பொதுவுடமை என்பதை உணர்ந்து அதை தேவைக்கேற்ப உண்டு தேவையுடையோருக்கும் கொடுத்து பொதுநலன் போற்றும் மக்களாக வாழ்வோமாக!

அத்திப்பழம்: புனித நூலின் சத்தியமும் அறிவியலின் உண்மையும்

அத்திப்பழம் (அரபு மொழியில் அத்-தின்) என்பது வெறும் சுவையான பழம் மட்டுமல்ல, அது ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஒரு “அற்புத உணவாகும்”.

நவீன மருத்துவத்திலும் அத்திப்பழம் எவ்வாறு ஒரு அத்தியாவசிய அங்கமாகத் திகழ்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இது ஒரு பழம் அல்ல, தலைகீழான மலர் (Inverted flower) தாவரவியல் ரீதியாக தனித்துவமானது, அத்தி என்பது ஒரு சைகோனியம் (syconium) ஆகும் — இது நூற்றுக்கணக்கான பூக்களை உள்ளே வைத்திருக்கும் ஒரு தசைப்பற்றுள்ள தண்டு.

1. இறை வேதத்தில் அத்திப்பழம்

திருக்குர்ஆனின் 95-வது அத்தியாயம் ‘ஸூரா அத்-தின்’ (அத்திப்பழம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இறைவன் அத்தி(Fig) மற்றும் ஒலிவத்தின் (Olive) மீது சத்தியம் செய்து, மனிதன் “மிகச் சிறந்த அமைப்பில்” படைக்கப்பட்டான் என்று கூறுகிறான்.

மனிதனை சிறந்த படைப்பாக படைத்தான் என்கிற இறைவன் ஏன் அத்திப்பழத்தின் மீது சத்தியமாக என்கிறான் ? சிந்தித்தது உண்டா?

அத்திப்பழத்தின் வடிவம் வித்தியாசமானது

Source : https://www.britannica.com/plant/fig

நபி(ஸல்) அவர்களுடன் நான் இஷாத் தொழுகைக்குப் பின்னால் தொழுதேன். அதிலே, அத்தீன் என்ற (95 வது) அத்தியாயத்தை ஓதினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).

2. தாவரவியலில் ஒரு அதிசயம்: ‘சைகோனியம்’

அறிவியல் ரீதியாக அத்திப்பழம் மற்ற பழங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது ‘சைகோனியம்’ (Syconium) எனப்படும் ஒரு தலைகீழான பூங்கொத்தாகும். அதாவது, அத்தியின் பூக்கள் பழத்தின் உட்புறத்தில் மறைந்து இருக்கும். இதன் மகரந்தச் சேர்க்கைக்காக ‘அத்தி குளவி’ (Fig Wasp) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பூச்சியுடன் இது ஒரு அரிய கூட்டுவாழ்வைக் கொண்டுள்ளது; குளவியின் உதவி இல்லாமல் அத்திப்பழம் உருவாக முடியாது.

3. ஊட்டச்சத்துக்களின் சுரங்கம்

அத்திப்பழம் ஒரு “ஊட்டச்சத்து களஞ்சியமாக” (Nutritional Powerhouse) கருதப்படுகிறது. இதில் உள்ள முக்கியமான சத்துக்கள்:

நார்ச்சத்து (Fiber): இதில் மிக அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை நீக்கி, செரிமானக் கோளாறுகளை (IBS-C) சரிசெய்ய உதவுகிறது.

தாதுக்கள்: எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீசியம் இதில் நிறைந்துள்ளன.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்: சிவப்பு ஒயின் மற்றும் தேநீரை விட இதில் அதிக அளவில் ஃபீனாலிக் சேர்மங்கள் உள்ளன, இவை புற்றுநோய் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

4. மருத்துவப் பயன்கள்

பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, அத்திப்பழம் கீழ்க்கண்ட நன்மைகளை வழங்குகிறது:

இதய ஆரோக்கியம்: பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சோடியத்தின் பாதிப்பைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.

நீரிழிவு மேலாண்மை: அத்தி இலைகளின் சாறு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

மூட்டு வலி மற்றும் மூலம்: பாரம்பரிய மருத்துவத்தில் இது கீல்வாதம் (Gout) மற்றும் மூல நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

அத்திப்பழமும் ஆலிவ் மரமும்! தவறான விளக்கமும்

பலவீனமான செய்திகள் :

நபி (ஸல்) அவர்களுக்கு அத்திப்பழ குலை ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதை சாப்பிட்டார்கள். பின்பு தனது தோழர்களிடம் அத்திப்பழம் சாப்பிடுங்கள். சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட பழங்களில் கொட்டை இருக்காது என்று இருந்தால் அது அத்திப்பழம் தான் என்று நான் கூறுவேன்.  அது மூலத்தையும், கீழ்வாதத்தையும் நீக்குகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

என்ன தான் இருந்தாலும் அத்திப் பழத்துக்கும், ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. இதற்கு இமாம்கள் அளித்துள்ள விளக்கங்களையே இவ்வாறு கூறுகிறோம். இறைவன் அத்திப்பபழம், ஆலிவ் மரம் ஆகியவற்றின் மீது சத்தியம் செய்து மனிதனை நாம் அழகிய வடிவில் படைத்தோம் என்றும், பின் பல விஷயங்களையும் கூறுகிறான்.

அத்தியின் மீதும் ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக! தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

(அல்குர்ஆன்: 95:1-4)➚

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முற்பட்ட இமாம்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்.

அத்தி என்பது திமிஷ்க் நகரில் உள்ள பள்ளிவாசலாகும். ஒலிவ மரம் என்பது பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை குறிக்கும். தூர் ஸீனீன் என்பது மூஸா அலை (நின்ற) மலை என்பதாகும் என்று அபூ அப்துல்லாஹ் ஃபாரீஸி கூறுகிறார்.

முஹம்மத் பின் கஃப் என்பார் கூறுகிறார்: அத்தி என்பது குகைத் தோழர்கள் தங்கிய பள்ளிவாசல். ஒலிவ மரம் என்பது ஈலியா நகரின் மஸ்ஜித். தூருஸீனீன் என்பது தூர் பள்ளிவாசலாகும்.

அத்தி மற்றும் ஜைத்தூன் என்பது ஷாம் (சிரியா) நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களை குறிக்கும்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15, பக்கம்: 509

தூர்ஸீனீன் என்பது (நபிகளாரின் பேரர்) ஹஸன் (ரலி) அவர்கள் ஆவார்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15, பக்கம்: 511

அத்தி என்றால் அத்திப்பழம், ஜைத்தூன் மரம் என்பது ஆலிவ் மரம் என்று நம் அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. இப்படியிருக்க இந்த இரண்டுக்கும் தொடர்பே இல்லாதவைகளை விளக்கம் என்ற பெயரில் கூறுவதேன்?

பழத்திற்கும் பள்ளிவாசலுக்கும் தொடர்பு உண்டா? மரத்திற்கும் மஸ்ஜிதிற்கும் என்ன சம்பந்தம் என்று படிப்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன.

இப்போது சொல்லுங்கள்! அத்திப்பழத்திற்கும் ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது தானே!

முடிவுரை: அத்திப்பழம் என்பது மனித குலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு உன்னதமான பரிசு. அதன் தனித்துவமான தாவரவியல் அமைப்பும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ நன்மைகளும் அதை ஒரு சிறந்த உணவாக மாற்றுகின்றன. அன்றாட உணவில் அத்திப்பழத்தைச் சேர்த்துக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பெரும் பலன் அளிக்கும்

The fig is not a single fruit but a complex, hollow structure containing hundreds of tiny individual flowers. Botanically, it is classified as a syconium, a type of “inverted flower” and a multiple fruit. 

The fig is the edible fruit of the fig plant (Ficus carica), a member of the mulberry family Moraceae. The fig plant can be a small tree or bush, ranging from 1 to 12 meters in height, characterized by its broad, rough, deciduous leaves.

Figs are multiple fruits, consisting of the gynoecia (female parts of the flower) from multiple flowers that ripen together. The flowers are either staminate (male) or pistillate (female) and are enclosed within the fig’s structure. There are hundreds of varieties of figs grown worldwide.

Structure of a Fig Fruit

  • Syconium (The “Fruit”): The visible teardrop-shaped pod is actually a fleshy, hollow stem (receptacle) that has grown around the flowers.
  • Ostiole (The “Eye”): A small opening at the bottom of the fig that serves as a narrow passage for pollinators, specifically the specialized fig wasp, to enter.
  • Achenes (The “Seeds”): The crunchy bits inside are the true individual fruits, each containing a single seed. These develop from the hundreds of tiny flowers lining the interior wall.
  • Pulp: The sweet, gelatinous interior consists of the ripe ovaries and specialized tissues of the internal flowers.
  • Skin (Peel): A thin, edible outer layer that varies in color from bright green to deep purple or brown depending on the variety.
  • Latex: All green parts of the plant, including the unripe fruit and stems, contain a milky white sap that can irritate human skin. 

Key Fig Types & Pollination Facts

  • Common Figs: These are the most prevalent commercial varieties (e.g., Brown Turkey, Mission). They are parthenocarpic, meaning they produce fruit without needing pollination or wasps.
  • Caprifigs: Often called “wild figs,” these are functionally male and produce the pollen needed for other types. They serve as nurseries for fig wasps.
  • Smyrna Figs: These require cross-pollination by fig wasps carrying pollen from caprifigs; without it, the fruit will drop before ripening.
  • San Pedro Figs: These produce two crops: an unpollinated “breba” crop in the spring and a main crop in the summer that requires pollination. 

Nutritional Highlights

  • Fiber Powerhouse: One serving provides roughly 20% of your daily recommended fiber.
  • Rich in Minerals: Figs are one of the highest plant-based sources of calcium, often containing more calcium than milk by weight. They are also high in potassium and iron.
  • Antioxidants: Rich in polyphenols and flavonoids, particularly in the darker-skinned varieties.