1. பாபரின் படைத் தலைவரான மிர்பக்கி என்பவரால் 1528 ஆம் ஆண்டு பாபரின் மஸ்ஜித் கட்டப்பட்டது. இவரது சொந்த ஊர் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட்.

2. துளசிதாஸ் என்பவரால் 1575-1576 ஆண்டுகளில் எழுதப்பட்ட முதல் ராமாயண கதையான ராம் சரித்திர மனாஸ் என்ற நூலில் ராமர் இங்குதான் பிறந்தார் என்று எந்த தகவலையும் பதிவு செய்யவில்லை.

3. 1857 ஆம் ஆண்டு பாபர் பள்ளிவாசல் முன்பாக சற்றுத் தொலைவில் நேரு போன்று இருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற பெயரில் உயர்த்தப்பட்டு அங்கே இந்துக்கள் பூஜை செய்தார்கள்.

4. 1859 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களுக்கு இடையே ஒரு சுவரை எழுப்பினார்கள். 883 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அங்கே இந்துக்கள் கோவில் கட்ட முயற்சிகள் எடுத்தார்கள்.

5. 1885 ஆம் ஆண்டு மறைந்த ரகுபார் தாஸ் என்பவர் கோவில் கட்ட அனுமதி கேட்டு அதை இந்திய அரசாங்க செயலாளர் தள்ளுபடி செய்கிறார். இதை எதிர்த்து 1885 ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

6. 1934-ஆம் ஆண்டு இந்துத்துவவாதிகள் பாபரி மஸ்ஜிதை சேதப்படுத்த, அதை எதிர்த்த பல முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். பின் ஆங்கிலேயர்களால் பாபரி மஸ்ஜித் சீரமைக்கப் படுகிறது.

7. 1940-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் சன்னி முஸ்லிம்களுக்கு சொந்தமா அல்லது ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமா என்ற வழக்கில் சன்னி முஸ்லிம்களுக்கு சொந்தம் என முதல் முறையாக நீதிமன்றத்தில் பாபர் மசூதி தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பாகும்.

8. கிர் பால் சிங் எஸ் பி பைசாபாத் மாவட்ட நீதிபதி கே கே நய்யாருக்கும், பிறகு 1949-இல் அதே மாவட்ட தலைமை காவலர்களும் ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் இந்துத்துவவாதிகள் ராம் சாபித் ராவில் இருக்கும் சிலைகளை பாபர் மஸ்ஜிதில் வைக்க இருக்கும் திட்டத்தை பற்றி விளக்கி இருந்தார். ஆனால் கடிதத்திற்கு எந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

9. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 காலை பல்லியின் பூட்டு உடைக்கப்பட்டு மிம்பரில் இந்துத்துவவாதிகள் சிலைகள் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி கேகே நய்யார் பள்ளிவாசலை பூட்டும் படி ஆணையிட்டார்.

10. அதே ஆண்டு டிசம்பர் 27 அன்று உத்தரபிரதேச முதல்வருக்கு கேகே நய்யார் இந்துத்துவவாதிகளின் இந்த செயலை ஏன் அரசு தடுக்கவில்லை என கேள்வி கேட்டு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

11. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 29 பிரியா பட் ராம் என்ற அரசு கண்காணிப்பாளரின் பொறுப்பில் பாபர் மஸ்ஜித் வந்தது. ஜனவரி 5, 1950 முதல் பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தொழுகை நடத்த அனுமதி இல்லை.

12. ஒரு கதவின் வழியே மட்டும் சென்று பூஜைகள் செய்து கொண்டிருந்தவர்கள் 1986 பிப்ரவரி 1 முதல் கே எம் பாண்டே என்ற நீதிபதியின் சூழ்ச்சியினால் மஸ்ஜிதின் பூட்டுகள் அனைத்தும் திறக்கப்பட்டு அங்கே பூஜை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

13. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த மாநிலத்தை ஆண்ட பிஜேபி அரசு பாபரி மசூதி சுற்றியுள்ள 2.74 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டும் நோக்கத்துடன் கையகப்படுத்தியுள்ளது.

14. 1992 அக்டோபர் 30, 31 தேதிகளில் விஎச்பி யின் சாமியார்கள் பிரிவு டெல்லியில் கூடி டிசம்பர் 6 இல் கரசேவையை ஆரம்பித்து அது ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை தொடரும் என அறிவித்தது.

15. 1992 டிசம்பர் ஆறாம் தேதி இந்துத்துவவாதிகள் காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பாபரி மஸ்ஜித் பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

16. மஸ்ஜிதை இடிப்பதற்கு ஓராண்டு முன்பு 1991 மே 13 இல் வரலாறு மற்றும் தொல்பொருள் துறை பேராசிரியர்கள் மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கோ, அங்கே ராமர் கோவில் அதற்கு முன்பு இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டனர்.

17. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் ஒரு அநீதியான தீர்ப்பு வெளியானது.

• அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்த முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் பிரிக்கப்பட்டது.

• மதநம்பிக்கையை மட்டுமே சாட்சியங்கள் என்று கூறிய ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்காத நிர்மோகி அகரா குழுவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் பிரிக்கப்பட்டது.

• குழந்தை ராமருக்கு” ராம் லல்லா” மூன்றில் ஒரு பங்கு நிலம் பிரிக்கப்பட்டு இது பாபர் மசூதியின் மையப்பகுதி என அடையாளப்படுத்தி உள்ளது.

18. முஸ்லிம்களின் மேலும் 10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று வரலாறு மற்றும் தொல்பொருள் துறை ஆய்வாளர்களின் அறிக்கை மற்றும் பாபர் மசூதி நிலத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளவும், முஸ்லிம்களுக்கு மாற்று இடமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்கவும் மீண்டும் ஒரு அநீதியான தீர்ப்பு வழங்கியுள்ளது.