மொகலாய வம்சத்தின் கடைசி மன்னர் பகதூர்ஷா ஜஃபர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு (பர்மா, மியான்மர்) நாடு கடத்தப்பட்டார்.

அடக்கம் செய்யப்படுவதற்கு இந்திய மண்ணில் இரண்டு கெஜ நிலம் கூட இல்லாமல் போனதே என்ற கண்ணீரோடு அங்கேயே காலமானார்.

16-12-1987-ல், பர்மாவுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பகதூர்ஷாவின் சமாதியில் எழுதப்பட்டிருந்த இரண்டு கெஜம் கவிதையைப் படித்தவர் கண்கலங்கி விட்டார்.

அங்கிருந்து வெளியேறும்போது பார்வையாளர் பதிவேட்டில் தன் எண்ணங்களைப் பதிவு செய்தார்.

ஜஃபர்! இரண்டு கெஜ நிலம் இந்துஸ்தானத்தில் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உனது தியாகத்தால் உதித்தது. பாரத நாட்டின் பெயரிலும் புகழிலும் உன் பெயர் கலந்து விட்டது.

இந்திய சுதந்திரப் போராளிகளின் தானைத் தலைவனாக விளங்கிய தளபதியே உனக்கு என் வீர அஞ்சலியைச் செலுத்துகிறேன். சுதந்திரப் போரில் நாம் வென்றோம். இன்னொரு முறை அடிமைத் தளையில் அகப்படமட்டோம்.

வேற்றுமைகள் பல இருப்பினும் அவற்றிற்கு இடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்போம்.அஹிம்ஸை, சகிப்புத் தன்மை அனைத்தையும் கைக்கொள்வோம். ஐயாயிரம் ஆண்டு கால சமயங்களின் சங்கம வரலாற்றை சிதைவுறாமல் பாதுகாப்போம் என்று எழுதிவிட்டு வந்தார்.

1985 முதல் ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தியின் பேச்சுக்களும், எழுத்துக்களும், இந்திய அரசின் தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகத்தின் சார்பில் தொகுப்பாக வெளியாகிக் கொண்டிருந்தது.

1987-ன் கடைசியில் பிரதமரின் பேச்சு மற்றும் எழுத்தின் மூன்றாம் தொகுதி வெளியானது. ஐநூறு பக்கத்திற்கு ஒரு பக்கம் குறைவாக அச்சிடப்பட்ட அந்நூல் பிரதமரின் பர்மா பயணத்தோடு நிறைவடைகிறது. அதிலும் மிகச் சரியாக பகதூர் ஷாவின் சமாதிப் பயணத்திற்கு முந்தைய நாளான 15-12-87 உடன் முடிவடைகிறது. அதில் சமாதிப் பயணமும் இல்லை, இரண்டு கெஜ கவிதையும் இல்லை, ராஜீவ்காந்தியின் குறிப்பும் இல்லை.(செ.திவான் இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு (இ.சு.பெ.இ.ப) பக்.431-433 சுஹைனா பதிப்பகம் மே 2007 மணிச்சுடர் நாளிதழ் சென்னை 18.12.1987)

இந்தச் செய்தி வெளியிடப்படாத மர்மத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படுகிறது.பொறுப்பு நிறைந்த ஒரு அமைச்சகமே அதைக் கண்காணிக்கிறது. அதுவும் நாட்டின் பிரதம அமைச்சர் சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால்அரசின் முக்கிய ஆவணத்தைப் போன்றது. பர்மாவுடனானஇந்தியாவின் நெருக்கத்தையும்நேசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று.

அதைவிட ராஜீவ்காந்தியின் எழுத்தாற்றலையும் தேசப்பற்றையும் பறைசாற்றும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பு.இவ்வளவுமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அரசுத் தொகுப்பில் அச்சேறாமல் போனது எப்படி? ஆவணம் தவறினாலும் சரி. செத்துப் போன பகதூர் ஷா மீண்டும் அரியணை ஏறிவிடக் கூடாது. ராஜீவின் புகழ் குறைந்தாலும் முஸ்லிம்களின் தியாகம் உயர்ந்து விடக்கூடாது என்பதைத் தவிர இதன் பின்ணணியில் வேறென்ன இருந்திருக்க முடியும்?

வரலாற்றுப் பேராசான் செ. திவான் கூறுகிறார். ஒருவேளை நாள் குறைவாலோ அச்சுப் பணியின் சிக்கலாலோ இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கலாம். கண்டிப்பாக அடுத்த ஆண்டின் அடுத்த தொகுப்பில் இடம்பெறக்கூடும் என்று எண்ணி அதன் வருகைக்காகக் காத்திருந்தேன்.

ஓராண்டு காலம் கழித்து எண்பத்தி எட்டாம் ஆண்டின் தொகுப்பும் வெளிவந்தது உடனடியாக வாங்கிப் படித்தேன் அதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்கிறார்.

இப்படி ஏராளமான கேள்விகள் இமயமாய் எழுந்து நிற்கின்றன. இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாகவும், இதைப் பற்றிய ஆய்வுகளுக்குத் தூண்டுதலாகவும் இந்த மண்ணின் மைந்தர்களது மகத்தான வீரத்தையும், மறுக்க முடியாத தியாகத்தையும்மறைக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தையும் அறிய படிக்கவும் வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்

PM Modi visits Mughal ruler Bahadur Shah Zafar’s grave in Ya ..

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/60405523.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst