
1. இந்திய தேசம் அன்னியருக்கு அடிமைப்பட்டு போனதற்கு மூல காரணமாகவும் முதல் காரணமாகவும் அமைந்தது கிபி 1498 ஆம் ஆண்டு கடல் வழியாக இந்தியாவிற்கு நுழைந்த வாஸ்கோடகாமாவின் வருகை.
2. வியாபாரத்திற்கென இந்தியாவிற்குள் வந்த போர்ச்சுக்கீசியர்கள் மக்களை அடிமைப்படுத்திடவும் மக்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் பெண்களின் கற்பை சூறையாடுவதும் என மிக கொடுமைகள் இழைத்துக் கொண்டிருந்தனர்.
3. இந்தக் கொடுமைகளை கண்டு போர்ச்சுகீசியர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று பொங்கி எழுந்தவர்தான் குஞ்சாலி மரைக்காயர்.
4. அன்றைக்கு கள்ளிக்கோட்டை மன்னனாக இருந்த சாமுத்திரியால் முடியாத கப்பல் படையை தன் செல்வத்தை திரட்டி உருவாக்கினார்.
5. கிபி 1500 முதல் 1605 வரை போர்ச்சுகீசியர்கள் கோழிக்கோடு மண்ணில் காலூன்ற விடாமல் காப்பாற்றினார்கள் குஞ்சாலி மரைக்காயர்கள்.
6. 100 ஆண்டுகள் 4 குஞ்சாலி மரைக்காயர்கள் இந்த மண்ணுக்காக தன் உயிரை தியாகம் செய்தார்கள்.
7. முதல் குஞ்சாலி மரைக்காயர் குட்டி அஹமது அலி 1524 – 1538
இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் அவரது மகன் 1538- 1569 குஞ்சாலி மரைக்காயர்
மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1569- 1595 பட்டு அலி
நான்காம் குஞ்சாலி மரைக்காயர் 1595- 1605 முஹம்மது அலி
8. இந்தியாவில் கப்பல் போர்படை உருவாக்கிய முதல் மனிதர் குஞ்சாலி மரைக்காயர் என்று பாராட்டுகிறது இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ வலைதளம்.
9. குஞ்சாலி மரைக்கார் என்பது இந்திய இஸ்லாமிய கடல்படை பிரிவினருக்கு வழங்கப்பட்ட பட்டம்
10. இறுதி குஞ்சாலி மரைக்காரை துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உள்நாட்டு மன்னர்கள் வீழ்த்தியது 800 ஆண்டுகள் நமது நாடு அடிமைப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
– அப்துர் ரஹ்மான், செந்தாரப்பட்டி


கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இரிங்கள் , வடகர என்ற ஊரில் அமைந்துள்ள குஞ்சாலி மரைக்காயர் நினைவு அருங்காட்சியகம்.
மரைக்காயர்கள் பயன்படுத்திய வாள் மற்றும் பிரங்கி பந்துகள் மற்றும் போர் சாதனங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

குஞ்சாலி மரைக்காயர்களின் தியாகத்தை நினைவுகூற கோழிக்கோடு வடகர வில் இந்திய கடற்படையால் நிறுவப்பட்டுள்ள “நினைவு தூண்”

