1. ஷெர்ஷாவின் இயற்பெயர் பரீத் போட்டுருக்காருதீன் அபுல் முசாபர்.
2. அவரது தந்தை இறப்பிற்குப் பின் நிர்வாகியாக பணிபுரிந்தார். மேலும் பீகாரில் பஹர்கான் அமைச்சரவையில் கிபி 1522 இல் பணிபுரிந்தார்.
3. பாபரின் மகன் ஹீமாயூனை தோற்கடித்து தன் 54-வது வயதில் டெல்லியை கைப்பற்றி ஷேர்ஷா என்ற பெயரைச் சூட்டி மன்னரானார். ஆட்சிக்காலம் கிபி 1540 – 1545
4. ஷெர்ஷாவின் ஆட்சியில் இவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டு பைசே எனவும் ருப்யா எனவும் வழங்கப்பட்டது.
5. இதுவே இன்றைய நாணயத்திற்கு பைசா எனவும் காகித பணத்திற்கு ரூபாய் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
6. ஷெர்ஷா, தான் ஆண்ட நிர்வாகப் பகுதிகளை 47 பகுதிகளாக பிரித்தார். இவைகள் சர்க்கார் என அழைக்கப்பட்டன. இந்த சொல் இன்றும் மத்திய சர்க்கார், மாநில சர்க்கார் போன்ற தொழிலாளர்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
7. சர்க்கார் பகுதிகள் பல பர்கானாக்களாக பிரிக்கப்பட்டன. இதனுடைய தலைமைப் பொறுப்பாளராக ஷேக்தார் என்ற பதவி அமைக்கப்பட்டது. இவருக்கு உதவியாளராக கோர்க்கூன் என்ற வரி கணக்கு எழுத்தர் இருந்தார். இதுவே இன்றைய நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் ( கலெக்டர்), இவருக்கு கீழ் வட்டாட்சியர் ( தாசில்தார்) போன்றவைகளாக உள்ளன.
8. ஷெர்ஷாவின் ஆட்சியில் பல்வேறு நெடுஞ்சாலைகள் போடப்பட்டன.
9. ஜீலம் நதிக்கரை சாலை, ரோஹ்டாங் சாலை (1500 கி.மீ தொலைவு) , ஆக்ரா-ஜோத்பூர் சாலை, லாகூர்-முல்தான் சாலை போன்ற பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டன. இது இன்றைய கிராண்ட் ட்ரங்க் ரோடு, தேசிய, மாநில நெடுஞ்சாலை போன்ற பெயர்களில் உள்ளன.
10. நெடுஞ்சாலைகளில் ஒற்று தகவல், மக்களின் கடிதங்கள் பரிமாறப்பட்டன. இந்த கடிதப் போக்குவரத்துமுறை பின்னாளில் தபால், தந்தி துறைக்கு முன்னோடியாக விளங்கியது.
11. டெல்லியிலுள்ள புராணா கில்லா கோட்டையை கட்டி இதில்தான் வசித்தார். இதனுள் குதிரை லாட வடிவில் 5 நுழைவாயில்களோடு 160 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட பள்ளி வாசலை கட்டினார். இது இன்று தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
12. கலிஞ்சார் கோட்டையை முற்றுகையிட்டபோது வெடிபொருளை கையாளும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இவர் கி.பி.1545ல் மரணமடைந்தார்.
