1. இவருடைய இயற்பெயர் ஔரங்கஜேப்(1618-1707)

2. முகலாயப் பேரரசின் ஒரு குறிப்பிடத்தக்க அரசர்களில் ஒருவரான இவர் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார்.

3. இவரை ஆலம்கீர் என்றும் அழைப்பர். இதன் பொருள் பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப் பிறந்தவன் என்பதாகும்.

4. முகலாய மன்னர்களிடையே அதிகமாக கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தவர் ஔரங்கசீப் தான் (1657-1707).

5. எளிமைக்கு பெயர் பெற்ற இவர் தனது வாழ்வில் எளிமையான இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடித்தவர்.

6. தனக்கு முன் ஆண்ட மன்னர்களைப் போல் அல்லாமல் அரசின் சொத்துக்களை மக்களுக்காகவே பயன்படுத்தியவர்.

7. அவருடைய சொந்த செலவுகளுக்காக தொப்பிகளை தைத்தும், திருக்குர்ஆனை தன் கரங்களால் எழுதியும் பொருள் ஈட்டியவர்.

8. இதனாலேயே ஆடம்பர வாழ்க்கை பின்பற்றி வாழ்ந்த தனது தந்தையை சிறையில் அடைத்தார்.

9. மன்னர் ஔரங்கஜேப் மீது அதிகமாக குற்றம் சுமத்த படுவதற்கு காரணம் என்னவென்றால், இவர் போதை வஸ்துக்கள் மற்றும் மதுவை தடை செய்தார். கேளிக்கை மற்றும் சூதாட்ட விடுதிகளை இழுத்து மூடினார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் ஆடம்பரமான கட்டிடங்கள் கட்டுவதையும் தடை செய்தார்.

10. இந்துக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார். உடன்கட்டை ஏறுதல் என்னும் மூடப் பழக்க வழக்கத்தை ஒழித்தார்.

11. ஔரங்கஜேப் மீது குற்றம் சுமத்த படுவதற்கு காரணம் இவர் இந்து கோயில்களை இடித்தார். கட்டாய மதமாற்றம் செய்தார் என்பவைகள் தான்.

12. கங்கை நதியில் நீராடி காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரிசிக்க விரும்பிய சிற்றரசர்கள் வழிபாடு முடிந்து சமஸ்தான ராணி மட்டும் திரும்பவில்லை. அப்பொழுது கோவில் உள்ளே தேடி பார்த்த பொழுது அவர் மானபங்கப் படுத்தப் பட்டிருந்தார். இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்ற காரணத்திற்காக அதில் உள்ள விக்ரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிய பின் சாஸ்திரிகளின் ஒப்புதலோடு அந்த கோவில் இடிக்கப்பட்டது. இது இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

13. அதேபோல் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் வரி குரிய செல்வத்தை பள்ளிவாசலுக்குள் ஓர் இடத்தில் புதைத்து வைத்ததால் அந்தப் பள்ளிவாசலும் ஔரங்கசிப் ஆட்சியில் இடிக்கப்பட்டது.

14. அவரது ஆட்சியில் கோவில்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. உஜ்ஜயினி , கௌகாத்தி, சீக்கியர்களின் பல குருத்து வாராக்கள் என பலவற்றிற்கும் மானியம் வழங்கப்பட்டது.

15. கட்டாய மதமாற்றம் செய்தாரா என்றால் அதுவும் இல்லை. மராட்டிய மன்னன் சிவாஜியின் மகன் சாம்பாஜி அரசியல் காரணங்களுக்காக ஏழு வயதிலேயே கைது செய்யப்பட்டு ஔரங்கஜேப் பின் அரண்மனையில் அவரது மகளுடைய வளர்ப்பிலே 18 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்துவாகவே வெளியேறினார்.

16. ஔரங்கசீப்பின் நம்பிக்கைக்குரிய இரண்டு பெரும் தளபதிகள் ஜெய் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆவர்.

17. அவரது படையிலும் நிர்வாகத்திலும் எண்ணற்ற அமைச்சர்கள் இந்துக்களாகவே இருந்தனர். 393 மான் சப்தார்களில் 182 பேர் இந்துக்கள்.

18. ஔரங்கஜேப் இஸ்லாம் கூறும் ” உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு” என்ற கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர்.

ஔரங்கஜேப் பற்றி மேலும் அறிய